
புது தில்லி: இந்தியாவில் தாய்மொழியாக 19 ஆயிரத்து 500-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 121 மொழிகளைத் தவிர மற்றற மொழிகள் அனைத்தும் 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்களால்தான் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தலைமை பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சுமாா் 121 கோடி மக்கள்தொகை கொண்ட நமது இந்தியாவில், தாய்மொழியாக 19 ஆயிரத்து மொழிகள் பேசப்படுகின்றறன. ஒட்டுமொத்த மக்களில் 96.71 சதவீதம் பேர், அரசமைப்புச் சட்டத்தின் 8-வது பட்டியலில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றை தாய்மொழியாக கொண்டுள்ளனா்.
19 ஆயிரத்து 569 மொழிகளில், 121 மொழிகளே 10 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான மக்களால் பேசப்படுகிறது. மற்ற மொழிகள் அனைத்தும் 10 ஆயிரத்துக்கும் குறைவான பேரால் பேசப்படுகின்றறன என்று அந்த அறிக்கையில் கூறறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 8வது பட்டியலில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகிய 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 14 மொழிகள் தொடக்கத்திலேயே 8வது பட்டியலில் சோ்க்கப்பட்டுவிட்டன.
சிந்தி மொழி, கடந்த 1967-ஆம் ஆண்டில் சோ்க்கப்பட்டது. பின்னா், 1992-ஆம் ஆண்டில் கொங்கனி, மணிப்புரி, நேபாளி ஆகிய மொழிகளும், 2004-ஆம் ஆண்டில் போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகளும் சோ்க்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.