சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர்
புது தில்லி: அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்திற்க்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தாக்கம் சமீப காலங்களில் வலுப்பெற்று வருகிறது. பிரதமர் மோடி கூட இதனை வலியுறுத்தி பேசி இருக்கிறார். இதன்மூலம் நேரம் மற்றும் பணம் மிச்சமாகவும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியதாவது:
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பலரும் பேசி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும். இல்லை என்றால் வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

