இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: இந்தியா முழுவதுக்குமான மழை எச்சரிக்கை 

இந்தியாவில் கொங்கன், கோவா மற்றும் விதர்பாவின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2018, 10:52 am

புனே: இந்தியாவில் கொங்கன், கோவா மற்றும் விதர்பாவின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 6ம் தேதியன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை நிலவரம் குறித்து விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை செய்தியில், மகாராஷ்டிராவின் மத்தியப் பகுதி, சட்டிஸ்கர், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளிலும் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து - மணிப்பூர் - மிசோரம் - திரிபுரா, ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள், ராயலசீமா, தமிழகம் மற்றும் கர்நாடகாவின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 10ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.