வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வெங்காயம் எப்படி வளரும் என்பது கூடத் தெரியாதவர் ராகுல் காந்தி: சிவ்ராஜ் சிங் சவுகான் கிண்டல் 

வெங்காயம் எப்படி வளரும் என்பது கூடத் தெரியாதவர் ராகுல் காந்தி என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2018, 8:21 am

DIN

உஜ்ஜயினி: வெங்காயம் எப்படி வளரும் என்பது கூடத் தெரியாதவர் ராகுல் காந்தி என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்து, 6  விவசாயிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்படி உயிரிழந்த விவசாயிகளுக்கான நினைவு தினம் கடந்த மாத இறுதியில் அனுசரிக்கப்பட்டது. அந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் வெங்காயம் எப்படி வளரும் என்பது கூடத் தெரியாதவர் ராகுல் காந்தி என்று ராகுலின் விவசாயிகள் சந்திப்பு குறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.

உஜ்ஜயினியில் பாஜக சார்பில் ‘ஜன் ஆசிர்வாத் யாத்ரா’ என்னும் யாத்திரையின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யாத்திரையை பாஜக தலைவர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

மண்டசூர் பகுதிக்கு சமீபத்தில் வருகை புரிந்த ராகுல் காந்தி, விவசாயிகளிடம் கலந்துரையாடியுள்ளார். அவர் விவசாயிகளிடம் நான் பிரதமராக இருக்க தயார் என்று கூறியுள்ளார். யார் அவரை பிரதமர் ஆக்குவார்? அவருக்கு மிளகாய் மேல்நோக்கி வளருமா அல்லது கீழ்நோக்கி வளருமா; வெங்காயம் தரைக்கு மேல் வளருமா அல்லது தரைக்கு கீழ் வளருமா என்பது கூடத் தெரியாது.

இவ்வாறு அவர் விமர்சித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.