இந்தியாவில் சம்ஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் சம்ஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சம்ஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

இந்தியாவில் சம்ஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொன்மையான மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அந்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 10,000 அதிகரித்துள்ளது. இது 71 சதவீத அதிகரிப்பாகும்.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சம்ஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 14,135 ஆக இருந்தது. இதுவே 2011-இல் 24,821 ஆக அதிகரித்துவிட்டது.
2001 முதல் 2011 வரை நமது நாட்டில் ஹிந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்புப் படி 52.83 கோடி பேர் நமது நாட்டில் ஹிந்து பேசி வருகின்றனர். இதில் நாட்டின் மக்கள்தொகையில் 43.63 சதவீதமாகும். 2011-இல் ஹிந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 42.20 கோடியாக இருந்தது.
இதற்கு அடுத்த இடத்தில் வங்க மொழி உள்ளது. வங்க மொழியை 9.72 கோடி பேர் பேசுகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 8.03 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக மராத்தியை 8.30 கோடி பேர் பேசுகின்றனர். இது மக்கள் தொகையில் 6.86 சதவீதமாகும். இதற்கு அடுத்த இடங்களில் தெலுங்கு, தமிழ், குஜராத்தி ஆகியவை உள்ளன. தெலுங்கு பேசுபவர்கள் 8.11 கோடியாகவும், தமிழ் பேசுபவர்கள் 6.90 கோடியாகவும், குஜராத்தி பேசுபவர்கள் 5.54 கோடியாகவும் உள்ளனர். இதுவே 2001-ஆம் ஆண்டில் முறையே 7.40 கோடி, 6.07 கோடி, 4.60 கோடியாக இருந்தது.
இவற்றுக்கு அடுத்த இடங்களில் உருது (5.07 கோடி), கன்னடம் (4.37 கோடி), ஒடியா (3.75 கோடி), மலையாளம் (3.48 கோடி), பஞ்சாபி (3.31 கோடி), அஸ்ஸாமி (1.53 கோடி) ஆகிய மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com