
பாஜக எம்எல்ஏ அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவர் ஹார்திக் படேல் உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50,000 அபராதம் விதித்து விஸ்நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
படேல் சமூக இடஒதுக்கீட்டு போராட்டக் குழுவை முன்னெடுத்து நடத்தி வந்தவர் ஹார்திக் படேல். படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்னிட்டு 2015-இல் தொடர் போராட்டத்தை ஹார்திக் படேல் முன்னெடுத்து நடத்தி வந்தார். அப்போது, விஸ்நகர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த குற்றத்துக்காக ஹார்திக் படேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, விஸ்நகர் அமர்வு நீதிமன்றம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் விஸ்நகர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. ஹார்திக் படேல், லால்ஜி படேல் மற்றும் ஏகே படேல் உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து விஸ்நகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.