குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் - ராஜ்நாத்துக்கு மம்தா எச்சரிக்கை

தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் என மம்தா பானர்ஜி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார். 
குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் - ராஜ்நாத்துக்கு மம்தா எச்சரிக்கை

தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தினால், உள்நாட்டு போர் ஏற்படலாம் என மம்தா பானர்ஜி ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார்.  

அசாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் மாநிலளங்களவையில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்பியது. 

அசாம் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேட்டால் மேற்கு வங்க மாநிலத்தவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கூறி இந்த திட்டத்தை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "வரைவுப் பதிவேடு செயல்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறுவதால், அதை அரசியலாக்க வேண்டாம்" என்று திங்கள்கிழமை விளக்கம் தந்தார்.    

இந்நிலையில், மம்தா பானர்ஜி செவ்வாய்கிழமை ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதாவில் திருத்தம் அல்லது மாற்றியமைக்கப்பட்டு புதிய மசோதாவை கொண்டுவர கேட்டுக்கொண்டேன். இந்த வரைவுப் பதிவேட்டில் விடுபட்ட மக்களுக்கு அரசு தொல்லை கொடுக்காது என்று அவர் என்னிடம் உறுதியளித்தார். 

மேற்கு வங்கத்திலும் வரைவுப் பதிவேட்டை அமல்படுத்தவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்தும் பேசினேன். ஒருவேளை அங்கு இதை அமல்படுத்தினால் உள்நாட்டு போர் ஏற்படலாம் என்று அவரிடம் கூறினேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com