கேரள மாநிலங்களவை தேர்தல்: சிபிஐ வேட்பாளர் அறிவிப்பு
கேரளத்தில் உள்ள மாநிலங்களவை இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் பினாய் விஸ்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


கேரளத்தில் உள்ள மாநிலங்களவை இடத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் பினாய் விஸ்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் எஸ்.சுதாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், பினாய் விஸ்வமின் பெயர் கட்சியின் உயர் நிலைக் குழுவிடம் பரிந்துரைக்கப்பட்டது. அதை அக்குழு ஏற்றுக் கொண்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் (காங்கிரஸ்), ஜாய் ஆப்ரகாம் (கேரள காங்கிரஸ்-எம்), சி.பி.நாராயணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கேரளத்தில் மொத்தம் 9 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 3 இடங்களையும், கேரள காங்கிரஸ்-எம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தையும் தம் வசம் வைத்துள்ளன. எஞ்சியுள்ள ஒரு இடத்தில் சுயேச்சை ஒருவர் எம்.பி.யாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...