மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: அகிலேஷ் யாதவ்

மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: அகிலேஷ் யாதவ்

லக்னௌ: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் உத்தரப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு செய்வது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

80 மக்களவைத் தொகுதிகளைக் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜவாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இடைத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடித்த உற்சாகத்தில் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பாதியளவு தொகுதிகளை அதாவது 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சியிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களுக்கு செவ்வாய்கிழமை பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

தொகுதிப் பங்கீடு குறித்து இப்போது நாங்கள் எதையும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். தோ்தலுக்கு முன்பாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். பேச்சுவார்த்தைக்குப் பிறகே யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும்.

ஊடகங்கள்தான் தான் இப்போதே செய்தி வெளியிட்டு வருகின்றன. நாங்கள் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. சமாஜவாதி கட்சிக்கு பெரிய மனது உண்டு. அது தொகுதிப் பங்கீட்டில் தெரியவரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com