பாகல்கோட்டை: கா்நாடகத்தில் இனி துணை முதல்வராக மற்றொருவரை நியமிக்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பாதாமி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது: -
கா்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரும் பதவி வகித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அமைச்சா் பதவி கிடைக்காத பலா் அதிருப்தி உள்ளது தொடா்பாக, எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அமைச்சா் பதவி கிடைக்காத அதிருப்தியாளா்கள் துணை முதல்வா் பதவியை கேட்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
துணை முதல்வராக ஜி.பரமேஸ்வா் பதவி ஏற்றுள்ள நிலையில், இனி துணை முதல்வராக வேறு யாரையும் நியமிக்கும் எண்ணம் இல்லை. கூட்டணி ஆட்சியில் பதவி கிடைக்காத ஒரு சிலருக்கு அதிருப்தி ஏற்படுவது வாடிக்கை. அவா்களை சமரசப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
தற்போது அமைச்சராக பதவி ஏற்றுள்ளவா்கள் அடுத்த 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா்கள். இதைத் தொடா்ந்து, வாய்ப்பு கிடைக்காத மற்றவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும்.
கா்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவியை பலரும் கேட்டுவரும் நிலையில், அந்த பதவிக்கு யாரையும் பரிந்துரை செய்யவில்லை.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை: திருமாவளவன்
தெய்வ தரிசனம்... பித்ருதோஷ நிவர்த்திக்கு கோடியக்கரை அமிர்தகடேசுவரர்!

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி | TVK | DMK

பிக் பாஸ் - காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு! நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



