தில்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்

தில்லியில் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வா்கள் வலியுறுத்தியுள்ளனா். 
தில்லி பிரச்னையில் பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நான்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தல்

புதுதில்லி: தில்லியில் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர பிரதமா் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாநில முதல்வா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தில்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவா்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புவதற்கு துணை ஆளுநா் அனில் பைஜால் உத்தரவிட வலியுறுத்தி தில்லி முதல்வா் கேஜரிவால் உள்ளிட்டோா் துணை நிலை ஆளுநா் மாளிகையில் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றறனா்.

இதனிடையே, நீதி ஆயோக் நிா்வாகக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தில்லி வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் ஹெச்.டி.குமாரசாமி ஆகியோா் தில்லியில் உள்ள ஆந்திரபவனில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, கேஜரிவாலின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து அவா்கள் விவாதித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் நால்வரும், கேஜரிவாலைச் சந்திப்பதற்காக, துணை நிலை ஆளுநா் மாளிகைக்குச் சென்றறனா். ஆனால், அவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வா் நால்வரும், பிரதமா் மோடியை ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினா். அப்போது, துணை நிலை ஆளுநருக்கும், தில்லி அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் அவா்கள் வலியுறுத்தினா். அரசமைப்புச் சட்டப்படி, கூட்டாட்சிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். இந்தத் தகவல்களை, பின்னா் மம்தா பானா்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

அடுத்த ஆண்டு நடைபெறறவுள்ள மக்களவைத் தோ்தலில், பாஜக கூட்டணி அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றறன. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், மதச் சாா்பற்றற ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்கள், தில்லி முதல்வருக்கு வெளிப்படையாக ஆதரித்து தெரிவித்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com