
ஜம்மு காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி முறிவுக்கு வந்ததை அடுத்து அங்கு தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. அங்கு அடுத்தபடியாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் மற்ற கட்சிகளும் ஆளுநர் ஆட்சிக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், அம்மாநில் ஆளுநர் என்.என். வோஹ்ரா தலைமையில் அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டதில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் மிர், பாஜகவின் சாட் சர்மா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், ஆளுநர் என்.என்.வோஹ்ராவின் ஆலோசகராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.