‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை வேண்டி திருமாவளவன் பொதுநல வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2018, 12:33 pm

DIN

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் 100-ஆவது நாளில் வன்முறையுடன் முடிவடைந்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்தான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் விசாரணை நடத்தும் பெரும்பாலான போலீஸார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களே என்பதால் நியாயம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தெரிவித்துள்ளார். 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கின் மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.