வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் 

ஒடிஷாவில் வீடு ஒன்றிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் 

புவனேஸ்வர்: ஒடிஷாவில் வீடு ஒன்றிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புக் குவியல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிஷாவின் பதராக் மாவட்டத்தில் உள்ள பைகாசாகி கிராமத்தில் பிஜே புயான் என்பவர் வசித்து வந்தார். இவரது வீட்டில் அவரது மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் மொத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக என்றால் ஒன்று, இரண்டு அல்ல; சுமார் 110-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள், குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்ந்து கொண்டு கிடந்தன. ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளம் இருந்து உள்ளன. அத்துடன் மேலும் 20 முட்டைகளும் அந்தப் பகுதியில் இருந்துள்ளன.

இதனைக் கண்டு மீட்புக் குழுவினர் மற்றும் பிஜே புயான் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து அத்தனை  நாகப் பாம்புக் குட்டிகளையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com