
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தில்லியில் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக பாதிப்படைந்து மோசமான நிலையில் இருந்தது. இந்த மாதத்திலேயே வரலாறு காணாத அளவில் காற்றின் தரம் 400-ஐ எல்லாம் தொட்டது. இதனால், தில்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் படி, காற்றின் தர குறியீடு
0-50 - நல்லது
51-100 - திருப்திகரமானது
101-200 - மிதமானது
201-300 - மோசமானது
301-400 - படுமோசமானது
401-500 - கடுமையானது
இதனால், காற்றின் தரம் இந்த மாதம் 400-ஐ தொட்டபோதெல்லாம் சுற்றுச்சூழல் குறித்து தில்லி மக்கள் கவலை கொண்டனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அங்கு திங்கள்கிழமை சிறிதளவு பெய்தது. பின்னர், நேற்று (வியாழக்கிழமை) கனமழை பெய்தது. இந்த மழை தில்லியின் வெப்பம் மட்டுமின்றி மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்த மோசமான மாசு என்ற நிலையும் கொண்டு சென்றது. பருவமழை பெய்வதற்கு முன் புதன்கிழமை காற்றின் தர குறியீடு 83-ஐ தொட்டது. இன்றும் தில்லி காற்றின் தரம் 83-இல் நீடிக்கிறது. அதன்படி தில்லி மக்கள் தற்போது சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு திருப்திகரமான காற்றை சுவாசிக்கின்றனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான் தில்லி மக்கள் திருப்திகரமான காற்றை சுவாசித்ததாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் தில்லியில் காற்றின் தரம் மேலும் சீரடையும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.