சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் எப்படிக் கொண்டாடப் போகுது தெரியுமா? 

சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் எப்படிக் கொண்டாடப் போகுது தெரியுமா? 

புதுதில்லி: சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை சிறப்பிக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையமானது ஒரு முயற்சி எடுத்துள்ளது.

அதன்படி அன்று ஒரு நாள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள ஏதேனும் ஒரு சுங்கச் சாவடியிலாவது இந்த திட்டமானது வரும் 8-ஆம் தேதியன்று செயல்படுத்தப்படும்.  தேர்ந்தெடுக்கப்படும் சாவடிகளில் அன்று பெண் ஊழியர்கள் பகல் நேரப் பணியில் மட்டும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த முன்முயற்சியானது வெற்றியடைந்தால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லா சுங்கச் சாவடிகளிலும் மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும்.

இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com