டீ விற்பனையில் முத்திரை: மாதம் ரூ.12 லட்சம் வருமானம்!

புணேவைச் சேர்ந்த டீ விற்பனையாளர் மாதம் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
டீ விற்பனையில் முத்திரை: மாதம் ரூ.12 லட்சம் வருமானம்!

டீ விற்றவர் முதல்வர், பிரதமர் என்று கூட ஆகமுடியும் ஆனால் மாதம் ரூ.12 லட்சம் வருமானம் ஈட்ட முடியுமா? இது ஒரு சாமானியனுக்கு சவாலாக இருந்தாலும், அதையும் ஒரு டீ விற்பனையாளர் சாதித்துக்காட்டியுள்ளார்.

ஏசி அறையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு சொகுசாக கணிணியில் வேலை பார்த்துக் கொண்டு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர் என்று ஐடி ஊழியர்களையும், வங்கி ஊழியர்களையும் பார்த்து வாய் பிளந்த காலம் கடந்து இப்போது டீ விற்பவரைக் கண்டு வியக்கும் நாட்களும் வந்துவிட்டன.

தமிழகத்தில் டீக்கடை நடத்தி வந்த பன்னீர்செல்வம் முதல்வராக உயர்ந்தது, ரயில்நிலையத்தில் டீ விற்று வந்த நரேந்திர மோடி பிரதமரானது என்ற நிலைக்கு அடுத்து டீ விற்பனையில் சிறந்த வணிகத்தை ஏற்படுத்தியுள்ளார் புணேவைச் சேர்ந்த நாவ்நாத் யேவாலே.

ஆம், புணேவில் டீ விற்று வரும் இவரின் மாத வருமானம் மட்டும் ரூ.12 லட்சம் என்கிறார். அப்போது ஆண்டொன்றுக்கு என்ன என்பதை நீங்களே கணக்குபோட்டுக்கொள்ளுங்கள்.

'யேவாலே டீ ஹவுஸ்' புணேவில் மிகப் பிரபலம். அந்த நகரத்தில் மட்டுமே 3 கிளைகளை வைத்து நடத்தி வருகிறார் நாவ்நாத் யேவாலே. இதில் மொத்தம் 12 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இதுகுறித்து 'யேவாலே டீ ஹவுஸ்' இணை நிறுவனர் நாவ்நாத் யேவாலே கூறியதாவது:

பக்கோடா விற்பனையைப் போன்று அல்லாமல் டீ விற்பனை இந்தியாவில் சிறந்த சுயதொழிலை உருவாக்கித் தருகிறது. என்னுடைய வர்த்தகம் நாளுக்குநாள் ஏற்றமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வரை புணே நகரில் மட்டும் 3 கிளைகளை வைத்து நடத்தி வருகிறேன். அதில் 12 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். விரைவில் இதன் கிளைகளை வெளிநாடுகளில் திறக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com