மாணிக் சர்கார் இல்ல கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக்கூடு: பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

மாணிக் சர்கார் இல்ல கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக பாஜக தலைவர் சுனில் வி.தியோதர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 
மாணிக் சர்கார் இல்ல கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக்கூடு: பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

திரிபுரா மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகளாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனவே, அம்மாநிலத்தின் 10ஆவது முதல்வராக பாஜகவைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டத் தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இல்லங்களில் முதலில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய பின்னர் குடியேறுமாறு பாஜக-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுனில் வி.தியோதர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் தற்போது முன்வைத்துள்ளார்.

கழிவுநீர் தொட்டி சுத்தப்படுத்துவது தொடர்பாக சுனில் வி.தியோதர் கூறியதாவது:

கடந்த 2005-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மாணிக் சர்கார் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து ஒரு பெண்ணின் எலும்புக்கூடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 25 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் அவர்கள், அரசியல் தொடர்பாக பல கொலைகளைச் செய்திருக்கக்கூடும்.

எனவே நான் முதல்வர் விப்லப் குமார் தேவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்களும், மற்ற அமைச்சர்களும் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இல்லங்களில் குடியேறும் முன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யுங்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com