புது தில்லி: பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-17ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்தியத் துறைகளின் பட்டியலை மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு 2016-17ம் நிதியாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 1,51,186 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், அதில் 27,833 விண்ணப்பங்களை அமைச்சகம் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிரதமர் அலுவலகம் ஆகியவை தங்களுக்கு வந்த விண்ணப்பங்களில் 10 சதவீதம் அளவு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன.
அதே போல, அடிப்படைக் காரணம் இல்லாமல் விண்ணப்பங்களை நிராகரிப்பது மற்றும் காரணம் இல்லாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களுக்காக ரூ.18.97 லட்சம் அளவுக்கு மத்திய தகவல் ஆணையம் மத்திய அமைச்சகங்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


