
உத்தரப்பிரதேசத்தில் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்த எதிரொலியாக அம்மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 45 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், ஆக்ராவில் 36 பேர், பிஜ்நூரில் 3, சஹாரன்பூரில் 2, பரேலி, மொராதாபாத், சித்ராகோட் மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பாதிப்படைந்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.