பாவப்பட்ட கரங்களில் கற்களும், துப்பாக்கிகளும் உள்ளன: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசாட்சி விதிமுறைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு தலைநகரங்களிலும் அரசாங்கப் பணிகள் மாற்றியமைக்கப்பட்டு செயல்படும்.
பாவப்பட்ட கரங்களில் கற்களும், துப்பாக்கிகளும் உள்ளன: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசாட்சி விதிமுறைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு தலைநகரங்களிலும் அரசாங்கப் பணிகள் மாற்றியமைக்கப்பட்டு செயல்படும். இதன் அடிப்படையில் ஜம்மு-வில் கடந்த 6 மாத காலமாக செயல்பட்டு வந்த அம்மாநில அரசாங்கப் பணிகள் சனிக்கிழமையுடன் முடிவுற்றது. 

இதையடுத்து ஸ்ரீநகரில் அரசாங்கப் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. அப்போது ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நம்முடைய ராணுவ வீரர்களும், குழந்தைகளும் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். கற்களும், துப்பாக்கிகளும் பாவப்பட்ட கரங்களில் உள்ளன. எனவே இவர்கள் அனைவரையும் காக்கும் விதமாக இவ்விவகாரத்தில் நடுநிலையுடன் இருந்து செயல்பட வேண்டியது கட்டாயம் என்றார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் ராணுவத்துக்கும், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், ஒருவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவராவார். இந்த மோதலைக் கண்டித்து இளைஞர்களும், அப்பகுதி மக்களும் போரட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்ததில் 5 பேர் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com