காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்

காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள 'செயல் திட்டம்' (ஸ்கீம்) குறித்த வரைவுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு வரைவு அறிக்கை 10 நாள்களுக்குள் தாக்கல் செய்யப்படும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாணப் பத்திரங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை (மே 8) விசாரணை நடைபெற்றது.

அதில், காவிரி செயல் திட்டம் தொடர்பாக, தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 109 பக்க அறிக்கையாக நீதிபதிகளிடம் மத்திய அரசு வழங்கியது. மேலும், செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தது. கர்நாடகா தேர்தலால் காவிரி திட்ட விவகாரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே செயல் திட்டம் தாக்கல் செய்ய 10 நாள்கள் கூடுதலாக கால அவகாசம் கோரியது.

இதையடுத்து, வரைவுத் திட்டம் பற்றி மத்திய நீர் வளத்துறை செயலர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். செயல் திட்டம் இந்நேரம் தயாராகி இருக்க வேண்டும். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்பு உருவாகி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com