கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்த கிராமம்

காலபுராகி மாவட்டத்தின் சித்தப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள தர்காஸ்பேட் கிராமத்தில் உள்ள மக்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்த கிராமம்

222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காலபுராகி மாவட்டத்தின் சித்தப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள தர்காஸ்பேட் கிராமத்தில் உள்ள மக்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

மொத்தம் 3,500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள 2,000 பேர் வாக்குப்பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தங்கள் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து தலைமை அலுவலகம் அமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அதனை உடனடியாக அமைக்க கோரியும் இம்முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com