கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: 70 சதவீத வாக்குகள் பதிவு

இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: 70 சதவீத வாக்குகள் பதிவு

222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. பெங்களூருவில் அமைந்துள்ள ஜெயா நகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 112 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். இதன் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் மொத்தம் 2,654 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 4,96 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவற்றில் 2.44 கோடி பெண் வாக்காளர்கள் ஆவர். 15 லட்சம் பேர் 18 முதல் 19 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள் ஆவர். 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 58,546 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் எந்தவொரு அரசும் கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியமைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com