பாஜக-வின் தென்னக வெற்றி தொடங்கியது: பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ்

அனைத்து புகழும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சேரும். 
பாஜக-வின் தென்னக வெற்றி தொடங்கியது: பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ்

கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 2 தொகுதியை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி மே 15-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தொடக்கத்தில் பின்தங்கிய பாஜக பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு 121 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்று வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்த வெற்றிக்காக கர்நாடக மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியால் கிடைத்த அனைத்து புகழும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சேரும். அதுபோல மாநில பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரும் தேர்தல் பணிகளை மிகச் சிறப்பாக செய்தனர். பாஜக-வின் தென்னக வெற்றி தொடங்கியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com