கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ராஜீவ் 27-ஆவது நினைவு நாள்: சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்

News image

ராஜீவ் காந்தியின் 27-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் அவரது நினைவிடமான வீர பூமியில் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்திய அவரது மனைவியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனிய

Updated On :21 மே 2018, 8:49 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்
கிழமை மரியாதை செலுத்தினர்.
தில்லியில் ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள வீர பூமியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் 
மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் முன்னாள் 
பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஷீலா தீட்சித், அசோக் கெலாட், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் நினைவாக, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ""ஒவ்வொருவரையும் எப்படி நேசிக்க வேண்டும்? எப்படி மதிக்க வேண்டும் என்று எனது தந்தை (ராஜீவ் காந்தி) எனக்கு கற்றுக் கொடுத்தார்; இதுவே ஒரு மகனுக்கு ஒரு தந்தை கொடுக்கக் கூடிய மதிப்புமிக்க பரிசாக இருக்க முடியும்; அதற்காக, எனது தந்தைக்கு அவருடைய நினைவு நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் தனது சுட்டுரைப் பக்கம் மூலமாக, ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், பி.எல்.புனியா, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, சஞ்சய் நிருபம், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோரும் சமூக வலைதளப் பக்கங்களில், ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். 
ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.