எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தெலங்கானாவில் தொகுதிப் பங்கீடு 9-ஆம் தேதி இறுதி செய்யப்படும்: காங்கிரஸ்

தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக மகா கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ், கூட்டணிக்

Updated On :6 நவம்பர் 2018, 12:59 am IST


தெலங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக மகா கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு வரும் 9-ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மகா கூட்டணியை அமைத்துள்ளன.
இதனால், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி - பாஜக ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ஆர்.சி.குந்தியா கூறியதாவது: தொகுதிப் பங்கீடு தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமூகமாகவே பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
இறுதிக்கட்ட முடிவுகள் சில எடுக்க வேண்டியுள்ளதால், தொகுதிப் பங்கீடு தொடர்பாக வரும் 9-ஆம் தேதி இறுதி செய்யப்படும். மேலும், அன்றைய தினமே கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் குறித்தும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி 18 தொகுதிகளையும், தெலங்கானா ஜன சமிதி 14 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் குறைந்தபட்சம் 5 தொகுதிகளையும் கேட்டுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தெலங்கானா பிரிவு, காங்கிரஸ் கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.