யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பால் ஔரங்காபாத்தின் பெயரை மாற்றச் சொல்லும் சிவ சேனை

யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பால் ஔரங்காபாத்தின் பெயரை மாற்றச் சொல்லும் சிவ சேனை

ஃபைசாபாத் என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயரை அறிவித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் அறிவித்ததைப் போல, ஔரங்காபாத் மற்றும் ஒசமனாபாத் ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்


ஃபைசாபாத் என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயரை அறிவித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் அறிவித்ததைப் போல, ஔரங்காபாத் மற்றும் ஒசமனாபாத் ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்-க்கு டிவிட்டரில் சிவ சேனை கூறியிருப்பதாவது, அலகாபாத் மற்றும் ஃபைசாபாத் ஊர்களுக்கு பிரயாக்ராஜ் மற்றும் ஸ்ரீஅயோத்யா என்று யோகி ஆதித்யநாத் பெயர்களை மாற்றியுள்ளது போல ஔரங்காபாத்துக்கு சம்பாஜி நகர் என்றும், ஒசமனாபாத்துக்கு தாராஷிவ் என்றும் ஃபட்னவிஸ் எப்போது பெயர்மாற்றம் செய்து அறிவிக்கப் போகிறார் என்று கேட்டுள்ளது.

இதற்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அளித்திருக்கும் பதிலில், சிலர் இருக்கிறார்கள், அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், ஆனால் அதிகம் பேசுவார்கள், ஆனால் நாங்கள் செயலில் மட்டுமே காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com