
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கும் 3 லட்சம் பக்தர்களில் 10 - 50 வயதுடைய 539 பெண் பக்தர்களும் அடங்குவர்.
ஐயப்பனை தரிசிக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை சபரிமலை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
இதில், வரும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சுமார் 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
10 - 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 3,505 பேர் கைது செய்யப்பட்டு 529 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஆன்லைனில் 539 பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.