காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது காங்கர் மாவட்டம் பங்கன்ஜோர், கைர்கார் மாவட்டம் ராஜ்நந்த்கோன் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் 5 பிரசார கூட்டங்களில் ராகுல் காந்தி பேசுகிறார். இதன்பின்னர் ஜெகதால்பூரில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான ரமண் சிங்கின் ராஜ்நந்த்கோன் தொகுதியில் சாலை மார்க்கமாக பயணித்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவும் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.