மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமனம்!

இந்திய நிர்வாக பணி, இந்திய வெளியுறவு பணி, இந்திய காவல் பணி போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மூன்று
மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவராக அரவிந்த் சக்சேனா நியமனம்!
Published on
Updated on
1 min read

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக இருந்து வரும் அரவிந்த் சக்சேனா, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நிர்வாக பணி, இந்திய வெளியுறவு பணி, இந்திய காவல் பணி போன்ற உயர் பதவிகளை அலங்கரிக்கும் அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக மூன்று கட்டங்களாக ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.).

இந்த தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக இருந்து வரும் அரவிந்த் சக்சேனா, புதன்கிழமை முதல் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

விமானப்படை ஆராய்ச்சி மைய பணிக்கு பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி யு.பி.எஸ்.சி.யின் உறுப்பினராக இணைந்த அரவிந்த் சக்சேனா, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் யு.பி.எஸ்.சி.யின் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.

தில்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்த சக்சேனா, பின்னர் தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். முடித்தவர் 1978 இல் குடிமையியல் தேர்வில் வெற்றி பெற்று கேபினட் செயலாளராக தனது பணியை தொடங்கினார். காஷ்மீர், பஞ்சாப் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களிலும், பல வெளிநாடுகளிலும் பல்வேறு பணிகளில் இவர் திறம்பட பணியாற்றிய இவர், நிலையான முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

2005 இல் மெரிட்டோரியஸ் சர்வீசஸ் (2005) மற்றும் 2012 இல் தன்னிகரற்ற சேவைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com