தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சுவாமி  ஆவேசம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   

News image
Updated On :30 நவம்பர் 2018, 8:01 am

IANS

புது தில்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   

பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். 

எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 

இந்த வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார். இந்த விழாவானது புதனன்று கர்தார்பூர் நகரில் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியா சார்பாக மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா  தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.  

சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக,'இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

விவகாரம் பெரிதானவுடன் கோபால் சாவ்லா யார் என்பது தனக்குத் தெரியாது என்று சித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  

இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சித்துவை தேசிய விசாரணை ஆணையம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க வேண்டும். பாகிஸ்தானில் அவர் எங்கெங்கு சென்றார், யார் யாரை சந்தித்தார், எங்கு யாருடன் தங்கியிருந்தார் உள்ளிட்ட விஷயங்களை விசாரிக்க வேண்டும்.     

அத்துடன் தனக்கும் காலிஸ்தான் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.