தோழியுடனான வாட்ஸ் அப் உரையாடலைக் கண்டித்த மனைவி: கணவனும் தோழியும்  தற்கொலை செய்த பரிதாபம் 

தோழியுடனான வாட்ஸ் அப் உரையாடலை தவறாக புரிந்து கொண்டு மனைவி கண்டித்த காரணத்தால்,  கணவனும் தோழியும் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நிகழ்நதுள்ளது. 
தோழியுடனான வாட்ஸ் அப் உரையாடலைக் கண்டித்த மனைவி: கணவனும் தோழியும்  தற்கொலை செய்த பரிதாபம் 
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்: தோழியுடனான வாட்ஸ் அaப் உரையாடலை தவறாக புரிந்து கொண்டு மனைவி கண்டித்த காரணத்தால், கணவனும் தோழியும் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நிகழ்நதுள்ளது. 

ஆந்திர மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள மரேட்பள்ளி பகுதியினைச் சேர்ந்தவர் சிவ குமார் (27). எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார். அவர் வசிக்கும் பகுதியிலேயே வசித்து வரும் வெனெல்லா(19) என்பர் இவரது தோழி. இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர் 

இந்நிலையில் சிவகுமாருக்கும் லஹரி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் சிவகுமார் தனது தோழியுடன் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் உரையாடி வந்துள்ளார். இதனை அவரது மனைவி லஹரி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.     அத்துடன் அவர் இதனைத் தொடர்ந்தால் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களிடம் புகார் செய்யப் போவதாகவும் கோரியுள்ளார். 

இதன் காரணமாக மிகவும் வேதனையடைந்த சிவகுமார், சனிக்கிழமையன்று தனது வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த தகவல் பரவியதும் வெனெல்லா மன அழுத்தத்திற்கு உள்ளனர். அத்துடன் சிவகுமாரின் மரணத்திற்கு வெனெல்லாதான் காரணம் என்று அனைவரும் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கமபக்கத்தவர் உடனடியாக அவரை அருகில் இருந்தகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி ஞாயிறு காலை மரணமடைந்தார். 

ஒரே நாளில் நிகழ்ந்த இரு மரணங்கள் அங்கு உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com