1947-இல் இருந்து ஏ.கே-47 க்கு: பிகார் முதல்வர் மீது லாலு பிரசாத் யாதவ் மகன் விமர்சனம் 

இந்தியா 1947-ல் விடுதலை பெற்றது; ஆனால் தற்போது ஏ.கே-47 க்கு பிகார் சென்று விட்டது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது, எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான   தேஜஸ்வி கடும் விமர்சனம்
1947-இல் இருந்து ஏ.கே-47 க்கு: பிகார் முதல்வர் மீது லாலு பிரசாத் யாதவ் மகன் விமர்சனம் 

பாட்னா: இந்தியா 1947-ல் விடுதலை பெற்றது; ஆனால் தற்போது ஏ.கே-47 க்கு பிகார் சென்று விட்டது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது, எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான   தேஜஸ்வி கடும் விமர்சனம் செய்துள்ளார். 

பிகாரில் கடந்த சில மாதங்களாக ஆயுதக் கலாச்சாரம் பெருகி வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பர்  மாதம் முஸாபர்பூர் மேயரும்அவரது வாகன ஓட்டுனரும் ஏ.கே-47 தாங்கிய சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அதேபோல் கடந்த 10 நாட்களில் மட்டும்  முங்கேர் மாவட்டத்தில் நடந்த சோதனைகளில் 12 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்தியா 1947-ல் விடுதலை பெற்றது; ஆனால் தற்போது ஏ.கே-47 க்கு பிகார் சென்று விட்டது என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது, எதிர்கட்சித் தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான   தேஜஸ்வி கடும் விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

1947-இல் இருந்து ஏ.கே-47 க்கு: இந்திய 1947 -ஆம் ஆண்டு தனி இறையாண்மை உடைய நாடாக சுதந்திரம் பெற்றது. ஆனால் பிகாருக்கு தற்போது ஏ.கே-47 ரக துப்பாக்கிகளை எளிதாக பயன்படுத்தும் சுதந்தரம்  கிடைத்துள்ளது. 

தங்களது எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக ஏ.கே-47 ரக துப்பாக்கிகளை 'நல்லாட்சி'  அளிப்பதன் பொருட்டு பயன்படுத்த அனுமதியளித்துள்ள பிகார் முதலவர் நிதிஷ் குமாருக்கு நன்றி. தொடரும் உங்களது 13 வருட ஆட்சியில், ஏ.கே-47 ரக துப்பாக்கிகளின் பயன்பாடு பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. 

கொடூர குற்றவாளிகளைக் கொண்ட கட்சி ஒன்றின் தலைவராக அவர் உளளார். கடந்த இரு மாதங்களாக மாநிலத்தில் அவர்களது கட்சி எம்.எல் ஏக்கள் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.  ஒரு எம்.எல்.ஏ ஏ.கே-47 விற்பனையில் கூட ஈடுபட்டுள்ளார். 

இவ்வாறு அவர் விமர்சனம் செய்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com