மீ டூவில் என் மீதான மன ரீதியிலான துன்புறுத்தலை நிறுத்துங்கள்: பிரபல எழுத்தாளர் வேண்டுகோள் 

'மீ டூ' பிரசாரத்தில் என் மீதான மன ரீதியிலான துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மீ டூவில் என் மீதான மன ரீதியிலான துன்புறுத்தலை நிறுத்துங்கள்: பிரபல எழுத்தாளர் வேண்டுகோள் 

புது தில்லி: 'மீ டூ' பிரசாரத்தில் என் மீதான மன ரீதியிலான துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய போது, பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இந்த சூழலில் கடந்த 13 - ஆம் தேதியன்று பிரபல ஆங்கில பெண் எழுத்தாளரான இரா திரிவேதி, புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான சேத்தன் பகத் 2010-ஆம் ஆண்டு தன்னை முத்தமிட முயன்று பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார், அதற்கு முன்னரும் பகத் மீது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சட்டி அதற்கு அவர் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 'மீ டூ' பிரசாரத்தில் என் மீதான மன ரீதியிலான துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இரா திரிவேதி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, சேத்தன் பகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டிருக்கிறார். 2013-ஆம் ஆண்டு இரா திரிவேதி தனக்கு அனுப்பியிருந்த 'சுய விளக்க' மின்னஞ்சல் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் அவர் அதில் இணைத்துள்ளார். தொடர் பதிவுகளில் அவர் கூறியுள்ளதாவது:

இப்போது யார் யாரை முத்தமிட விரும்பினார்கள் ன்பது தெரிந்திருக்கும். அவரது மின்னஞ்சலின் கடைசி வரியின் மூலமாக 2010-இல் அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல  என்று தெரிந்திருக்கும். என் மீதான மற்றும் எனது குடும்பம் மீதான இந்த மன ரீதியிலான துன்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். ஒரு நல்ல பிரசார இயக்கத்திற்கு இத்தகைய போலிக் குற்றச்சாட்டுகளால் பாதிப்பு ஏற்படுத்தி விடாதீர்ககள். யாரும் இத்தகைய முட்டாள்தனமான அவதூறு பிரசாரங்களை நம்ப வேண்டாம். 

அத்துடன் 2015- 2016 வருடத்தில் நடந்த இரா திரிவேதியின் புத்தக வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொண்ட விடியோவை வெளியிட்டுள்ள சேத்தன் பகத், 'தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஒருவரை யார்தான் தனது புத்தகதை வெளியிட அழைப்பார்கள்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.      
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com