ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தங்களது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இரு ஊடுருவல்காரர்களின் உடலையும் எடுத்துச் செல்லும்படி பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ரஜெளரி மாவட்டம், சுந்தர்பானி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு, பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை தடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் மூண்டது. இந்த மோதலில் ஊடுருவல்காரர்கள் இருவரும், ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுட்டுக் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் உடலை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை உறுதி செய்ய இரு நாட்டு ராணுவ தலைமை அதிகாரிகளும் கடந்த மே 29-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக் கூடாது என இந்தியா அமைதி காத்து வருகிறது. ஆனால், எல்லையில் பயங்கரவாதிகள் பல முறை ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்தது. மே 30-ஆம் தேதியில் இருந்து இதுவரை 7 முறை எல்லை ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது. அதில் 23 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

