ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் 

மறைந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் 

புது தில்லி: மறைந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரை நிகழ்ச்சியான "மன் கி பாத்" நிகழ்ச்சியில் அவர் ஞாயிறன்று பேசியதாவது:

ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் மறைந்த தலைவர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சிலையை வரும் 31ம் தேதி நான் திறந்து வைக்க உள்ளேன். இதையொட்டி அன்று நடைபெறவுள்ள ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.

சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும். சமூக பணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரியாக அமையும். இயற்கையை காப்பது நமது கடமை. இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் குடும்பத்திற்கு நான் தலைவணங்குகிறேன். 

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 72 பதக்கங்கள் பெற்றது மகிழ்ச்சியான நிகழ்வு. பதக்கம்பெற்ற வீரர்களை நான் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினத் தலைவர்கள் பங்கு போற்றத்தக்கது. பழங்குடியினத்தவர் இயற்கையைப் பேணிக் காத்து வருகின்றனர். 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com