

புது தில்லி: ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக அதன் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ள கருத்தால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செயல்படுமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்திஇருந்தது. இதை மனத்தில் வைத்தே ஆச்சார்யா இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுடனான கருத்து வேறுபாட்டை ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது அதிருப்தி அளிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.