எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க விஜய் மல்லைய்யாவுக்கு 3 வாரம் அவகாசம்

இந்திய அரசால் வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தி தண்டனை வழங்குவது தொடர்பாக ஜூலை மாதம் இரு அவைகளின் ஒப்புதலுடன் புதிய சட்டத்தை ஏற்படுத்தியது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 1:43 pm

இந்திய அரசால் வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தி தண்டனை வழங்குவது தொடர்பாக ஜூலை மாதம் இரு அவைகளின் ஒப்புதலுடன் புதிய சட்டத்தை ஏற்படுத்தியது.

எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் இந்தியாவில் பெரும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.9 ஆயிரம் கோடி வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையா மீது இச்சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு 3 வார காலம் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.