
கடந்த கோடைக்காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து சென்னை மாநகர மக்கள் கொடுக்கும் புகார் கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் 7% குறைந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.
மின்சாரத் துறையின் கட்டமைப்புகளை பலப்படுத்தியதே இதற்குக் காரணம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதாவது, மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து அவசரகால அழைப்பான 1912 உதவி எண்ணுக்கு கடந்த 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை தொலைபேசி வாயிலாக 3,35,825 புகார்கள் வந்த நிலையில், 2017 - 18ம் ஆண்டில் 3,14,579 அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தி வந்தது. அதன் காரணமாகவே மின்சாரத் துண்டிப்பு குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வர இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். ஆனால் இப்போது 15 நிமிடத்தில் மீண்டும் மின்சாரம் வந்துவிடுகிறது என்று பொதுமக்களும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.