
ஹைதராபாத்: தெலங்கானா மற்றும் ஆந்திர மாநில ஆளுநராக இருக்கும் இஎஸ்எல் நரசிம்மன், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சைக்கிளில் ராஜ்பவனுக்குச் சென்றார்.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாவது வழித்தடத்தை இன்று துவக்கி வைத்த பிறகு, அதே மெட்ரோ ரயிலில் பயணித்து, கரிதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினார்.
அங்கு யாருமே எதிர்பார்க்காத வகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த கட்டணச் சைக்கிளை எடுத்துக் கொண்டு ராஜ்பவன் சென்று சேர்ந்துள்ளார்.
72 வயதாகும் நரசிம்மன் ஓய்வு பெற்ற ஐபிஸ் அதிகாரியாவார். இவர் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்ல, அவர்களது பாதுகாவலர்கள் அவர் பின்னாலேயே ஓடியுள்ளனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணித்து ராஜ்பவனுக்குச் சென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.