கடந்த ஆண்டில் தேர்தல் நன்கொடையாக பாஜக பெற்ற தொகை எவ்வளவு தெரியுமா? 

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் நன்கொடையாக பாஜகரூ.1000 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
கடந்த ஆண்டில் தேர்தல் நன்கொடையாக பாஜக பெற்ற தொகை எவ்வளவு தெரியுமா? 

புது தில்லி: கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் நன்கொடையாக பாஜகரூ.1000 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ள தொகைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் வருமானவரித்துறை ரிட்டன் தாக்கல் செய்துள்ளன,. அதில் இருந்து தெரிய வருவதாவது:

கடந்த ஆண்டில் அதிகமான நன்கொடை வாங்கிய கட்சிகளில் ரூ.1000 கோடிக்கு மேல் பெற்று பாஜக முதலிடம் வகிக்கிறது. 

பாஜக தவிர்த்து மேலும் 4 கட்சிகள் அதிகமான அளவு நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அவற்றில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ரூ.717 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ரிட்டன் தாக்கல் செய்துள்ளது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2017-18-ம் ஆண்டு ரிட்டனில் ரூ.291 கோடியாக உயர்ந்துள்ளது.

2017-18-ம் நிதியாண்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.1.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வருமான ரிட்டன் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com