மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: முதல்வர் கமல்நாத் முதல் கையெழுத்து  

மத்திய பிரதேசத்தில் ரூ. இரண்டு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் முதல் கையெழுத்து போட்டுள்ளார். 
மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: முதல்வர் கமல்நாத் முதல் கையெழுத்து  

போபால்: மத்திய பிரதேசத்தில் ரூ. இரண்டு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் முதல் கையெழுத்து போட்டுள்ளார். 

அண்மையில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. அதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு, கமல்நாத்தை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆளுநர் மாளிகையில் திங்களன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில்  கமல்நாத்துக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கமல்நாத்தின் அமைச்சரவை சகாக்கள் வேறு ஒரு நாளில் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. 

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ. இரண்டு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் முதல் கையெழுத்து போட்டுள்ளார். 

தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வது குறித்தும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். 

தற்போது அதை உடனே செயல்படுத்தும் விதமாக கமல்நாத் முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com