ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்? மத்திய அரசு ஆய்வு

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்பு மாதிரிகளை இந்தியாவின தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2019, 10:08 am


புது தில்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்பு மாதிரிகளை இந்தியாவின தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.

ராஜஸ்தானில் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய சோதனையில், நோ டியர்ஸ் என்ற விளம்பரத்துடன் வரும் குழந்தைகளுக்கான ஜான்ஸன்ஸ் ஷேம்புவில் புற்றுநோயை உருவாக்கும் ஃபார்மால்டிஹைடி எனும் ரசாயனம் கலந்திருப்பது இரண்டு வெவ்வேறு மாதிரிகளில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஷாம்பு மாதிரிகளை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஈஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சோதனையில் சம்பந்தப்பட்ட ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சந்தையில் இருந்து ஷாம்பு திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிடப்படும் எனக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.