

மோடி அரசின் உண்மைதன்மையை அத்வானியின் வார்த்தைகள் குறிப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டதாவது:
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசை குறிப்பதாகவே உள்ளது. பாஜக தனது ஆண்டு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அந்த கட்சியின் மீதான நம்பகத்தன்மை இழந்துவிட்டது.
எனவே இந்த கொடுங்கோல், மக்கள் விரோத மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.