சாலை இல்லை என்பதால் வாக்கும் இல்லை: ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்!

சாலை வசதி ஏற்படுத்தி தராத காரணத்தால் யாரும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஒட்டுமொத்த கிராமமும் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிஜ்னூர் தொகுதியைச் சேர்ந்த மஜ்லிஸ் தௌஃபிக்பூர் கிராம மக்கள் ஒருமித்த கருத்துடன் இம்முடிவை எடுத்துள்ளனர். 

தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு ஏராளமான தலைவர்கள் வருகை தருவார்கள். ஆனால், யாரும் எங்கள் கிராமத்துக்கு எந்த அடிப்படை வசதியையும் ஏற்படுத்தியதில்லை. குறிப்பாக எங்கள் கிராமத்தின் பிரதான சாலை கூட மிக மோசமான நிலையில் உள்ளது. இதானால் ஏராளமான விபத்து நடைபெறுகிறது. குறித்த நேரத்தில் பயணிக்க முடிவதில்லை. 

மகளிர் உயர்கல்விக்கு கல்வி நிலையம் கிடையாது. ஒவ்வொரு முறையும் வாக்குறுதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே எங்கள் கிராமத்தின் அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்தும் வரை வாக்களிக்கப் போவதில்லை என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம் என்று பிஜ்னூர் கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com