கறுப்புப் பணமும், ரூ.15 லட்சமும் எங்கே? கபில் சிபல் கேள்வி

2014 தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். 
கறுப்புப் பணமும், ரூ.15 லட்சமும் எங்கே? கபில் சிபல் கேள்வி

2014 தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெளியிட்ட எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.

ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. மீட்கப்பட்ட அந்த கறுப்புப் பணத்தில் இருந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார்கள். அதுவும் எங்கே என்று தெரியவில்லை.

370 நீக்கப்பட்டு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்கள். அதை அப்படியே இம்முறையும் பிரதிபலித்திருக்கிறார்கள். மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்தாமல் தற்போது தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டிருக்கிறார்கள்.

2025-ஆம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரம் 5 ட்ரில்லியனாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். ஆனால், வெளிநாட்டில் பேசும் போது இந்தியாவின் பொருளாதாரம் 9 ட்ரில்லியனாக இருப்பதாக பிரதமர் மோடி தனது வழக்கமான பொய்யை கூறியுள்ளார். நாட்டின் நிறுவனங்களையும் பாஜக அழித்துவிட்டது என்று விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com