370 சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் வாக்குறுதிகளை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்: சிவ சேனை

370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது. 
370 சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் வாக்குறுதிகளை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்: சிவ சேனை

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவ சேனையின் அதிகாரப்பூர்வ சாம்னா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,

பாஜக-வின் சங்கல்ப பத்திர தேர்தல் வாக்குறுதிக்கு சிவ சேனை 100-க்கு 200 மதிப்பெண்கள் அளிக்கிறது. குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்கள் பாராட்டுக்குரியவை.

அதேவேளையில், ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு பாஜக செலுத்தும் உரிய மரியாதையாக அமையும்.

அதேபோன்று 2019-ஆம் ஆண்டுதான் ராமர் கோயில் அமைக்க சரியான நேரம் மற்றும் கடைசி வாய்ப்பாகும். பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை தேசத்தின் மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com