நொய்டாவில் தேர்தல் பணியாற்றிய காவலர்களுக்கு வழங்கிய 'நமோ உணவு': உண்டானது சர்ச்சை!

நொய்டாவில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் நமோ உணவு என்று பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஆனால் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்தே இந்த உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டதாகவும், இது எந்த அரசியல் கட்சியினராலும் வழங்கப்பட்டது அல்ல என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் இருந்த காவலர்களுக்கு 9 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அந்த உணவுப் பொட்டலங்களின் மீது நமோ உணவு என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த செய்தியாளர்களும், பொதுமக்களும் அதனை வலைத்தளத்தில் பகிர சர்ச்சை உருவானது.

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த உணவினை வழங்கியதாக தவறான தகவல்கள் பரபரப்பட்டு வருகிறது. இது மிகவும் தவறு. அருகில் இருக்கும் நமோ ஃபுட்ஸ் என்ற கடையில் இருந்துதான் உணவு வாங்கப்பட்டதேத் தவிர, எந்த அரசியல் கட்சியும் கொடுக்கவில்லை என்று காவல்துறை உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com