ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குப்பதிவு மையம்: இது குஜராத் அதிசயம்!

குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குப்பதிவு மையம்: இது குஜராத் அதிசயம்!
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த கிர் வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் ஒரேயொரு வாக்காளருக்காக பிரத்தியேகமாக ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வாக்காளரும் கடமை தவறாமல் அங்கு தனது வாக்கை செவ்வாய்கிழமை பதிவு செய்தார். அவரது பெயர் பரத்தாஸ் பாபூ ஆகும்.

இதுகுறித்து பரத்தாஸ் பாபு கூறுகையில்,

எனது ஒரு வாக்குக்காக இங்கு ஒரு வாக்குச்சாவடி மையத்தை அரசு அமைத்துள்ளது. என்னுடைய ஒருவருக்காக அரசு இந்த செலவை செய்துள்ளது. நானும் தவறாமல் வாக்களித்துவிட்டேன். அதனால் எனது வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

இதேபோன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அனைவரும் தயவு செய்து தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றம் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com